ஜனவரி 1 :ஆதியாகமம் 1-2; லூக்கா:1
Scripture வேதவசனம்: ஆதியாகமம் 1:24 பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய
நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும்
ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Observation கவனித்தல்: அறிவியல் மற்றும் உயிரியல் குறித்த மனிதனின் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் ஒரு ஒழுங்குக் குட்பட்டு இருக்கின்றன. வான சாஸ்திரத்தை கற்றுக் கொள்பவர்கள் அண்டவெளியில் நட்சத்திரங்கள் மற்ற நட்சத்திரங்களுடன் எவ்வாறு ஒரு வரிசையில் இருக்கின்றன என்பதையும், சூரியக் குடும்பத்தில் அவை எவ்வாறு இருக்கின்றன என்பதையும் ஆராய்கின்றனர். தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றியக் கல்வியும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வியாகவே இருக்கிறது. கணவன் மனைவி ஆகியோர் குழந்தைகளைப் பெறுவதிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அகிலமனைத்திலும் தேவன் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கின் படிச் செய்கிறவராகவே இருக்கிறதை நாம் காண்கிறோம்.
Application பயன்பாடு:
என் வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு ஏற்படவேண்டும் என்பதற்காகவே நான் புத்தாண்டு தீர்மானங்களை எடுக்கிறேன். ஆனால் நான் தேவன் என்னை அதிகமாக வழிநடத்த விட்டுக் கொடுக்கும் போது, அவர் என் வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை ஏற்ப்படுத்துவதுடன், அவர் பிரசன்னமானது அந்த ஒழுங்கை என் வாழ்க்கையில் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது. ஒழுங்குபடுத்துவதிலும் அதில் நிலை நிறுத்துவதிலும் தேவனே சிறந்தவராக இருக்கிறார். இப்படிப்பட்ட மிகவும் அற்புதமான உதவியாளர் இருக்கையில், நான் என் சொந்த பலத்தில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்தி அதைக் கைக்கொள்ள முயற்சிப்பது எவ்வளவு மதியீனமானதாக இருக்கும்!
Prayer ஜெபம்: கர்த்தாவே, இந்த 2013ம் வருடம் என் வாழ்க்கையில் உம் ஒழுங்கை ஏற்படுத்தும் ஒரு வருடமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். நான் உம் ஒழுங்கிற்குக் கீழ்ப்படியும் வேளையில், சில நாட்கள் மற்றும் வாரங்கள் மட்டும் பின்பற்றாமல் முழு ஆண்டும் நான் அதைச் செய்ய வேண்டும் எனில், எனக்கு உம் உதவி தேவை.ஆமென்.
No comments:
Post a Comment