Tuesday, January 1, 2013

SOAP 4 Today - அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்

 
Scripture வேதவசனம்:   ஆதியாகமம் 5:1 இது ஆதாமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி. தேவன் மனிதரைத் தம் சாயலிலேயே படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார்.

Observation கவனித்தல்:    வேதாகமம் தேவனுடைய ஏவுதலால் எழுதப்பட்டது. இங்கே முக்கியமான பங்களிப்பாளரான நேரடி சாட்சியான , சிருஷ்டிகரான தேவனே சம்பவத்தைக் கூறுவதை காண்கிறோம். இந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது மறுக்கவோ உறுதிப்படுத்திக் கொள்வதற்கான எந்த நபரும் இன்று உயிரோடு இல்லை ஆதலால், இது நம்மை நம்பச் செய்கிறது.  ஒருவர் இந்த நம்பவில்லை எனில்,  இந்த பூமியில் மனிதர்கள் எப்படி தோன்றினர் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்படுவது இயல்பு.  பரிணாமக் கொள்கை ஒரு நல்ல விளக்கமாக இருக்கிறது. ஆனால் அது வேதாகமக் குறிப்புடன் ஒத்து வரவில்லை.
 
Application பயன்பாடு: நான் ஆணாகவும் என் மனைவி பெண்ணாகவும் இருக்கிறார். நாங்கள் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.  என்னைச் சுற்றி இருக்கிற மனிதர்கள் ஒருவேளை அறிந்திருந்தாலும் அறியாவிடினும் கூட, அவர்களும் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டவர்களே! ஆகவே நான் ஒருவர் என்னை ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி - அவர்களை நான் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் உம் கரத்தின் கிரியைகள், உம் சாயலை உடையவர்கள் என்பதைக் காண எனக்குதவும்.ஆமென்.
 

No comments:

Post a Comment