Thursday, January 10, 2013

SOAP 4 Today - மன்னிப்பதில் சிறந்தவர்

 
Scripture வேதவசனம்: லூக்கா 11:2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும் போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;
3. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;
4. எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்.

Observation கவனித்தல்:    மன்னிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது கடினமானது ஆகும். நம் அனைவருக்கும் மன்னிப்பு தேவை,  ஆனால் பிதாவிடம் இருந்து நாம் பெறும் மன்னிப்பிற்கு நிபந்தனையை இயேசு நமக்குச் சொல்லித் தந்த ஜெபம் தருகிறது.  நாம் மற்றவர்களை எப்படி மன்னிக்கிறோமோ அதன் படியே அவர் நம்மை மன்னிக்கிறார்.  நாம் இப்பொழுது அவருடைய பிள்ளைகளாக இருக்கிறபடியால், அவரைப் போல மன்னிக்கிறவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.         
 
Application பயன்பாடு:  நான் மன்னிக்கிறவனாக இருக்க வேண்டும் என தேவன் எதிர்பார்க்கிறார். எனக்கு மன்னிப்பு மிகவும் அதிக தேவை என்ற அறிவும் புதுப்பிக்கப்பட்ட உறவுகளுக்கான சாத்தியங்கள் ஆகியன நான்  மன்னிக்கிறதற்கு எளிமையாக இருக்கும்படி என்னை மாற்ற வேண்டும். 
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நீர் ஏற்கனவே என்னை மன்னித்திருக்கிறீர். உம் பிரசன்னம் என்னை மன்னிக்கிறவனாக இருக்கும்படி பலப்படுத்துகிறது.  மற்றவர்களை நான் எப்படி மன்னிக்கிறேன் என்பதைப் பொறுத்தே என் எதிர்கால மன்னிப்பு இருக்கிறது என்பதை அறிந்து நான் மன்னிப்பதில் சிறந்தவனாக விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment