Scripture வேதவசனம்: ஆதியாகமம் 26:32 அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.
Observation கவனித்தல்: தண்ணீர் இருக்குடத்திற்கு மந்தை வழிநடத்தப்படவேண்டும், ஊழியக்காரன் எங்கே தண்ணீர் கிடைக்கும் என்பதைக் கண்டுபிடிக்கிறவனாகவும், தேவைப்பட்டால் தோண்டி எடுக்கவும் கூடியவனாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் இடத்திற்கு மந்தை வழிநடத்தப்படுகிறது. மேய்ப்பன் மந்தை இருக்கும் இடத்திற்கு தண்ணீர் கொண்டு வர முடியும். மந்தையானது சமதளத்தில் இருந்து தண்ணீர் அருந்துகிறது, மேய்ப்பன் பூமிக்குக் கீழே இருந்து அதை தோண்டி எடுக்கிறான். மந்தை மேலே உள்ள நீரை பருகுகிறது, மேய்ப்பனோ ஆழத்தில் ஓடும் நீரைப் பருகுகிறான்.
தண்ணீர் இருக்கும் இடத்தில் வைத்து மந்தை பராமரிக்கப்படவேண்டும். ஊழியக்காரன் சூழ்நிலைகளை மாற்றும் சக்தியுள்ளவனாக இருக்கிறான். ஊழியக்காரன் வறண்ட இடங்களுக்கு தண்ணீர் கொண்டு வரக் கூடியவனாக இருக்கிறான், ஒருவர் தண்ணீர் துரவைத் தோண்ட வேண்டியதாயிருக்கிறது. ஆனால் ஒருவர் தோண்டுவதற்கு விருப்பமுடையவனாக இருக்கும்போது, அவனுடைய செயலின் மூலம் பின்வரும் அனேக தலைமுறைகளுக்கு அது ஆசீர்வாதமாக இருக்க முடியும்.
Application பயன்பாடு.: ஊழியர்கள் பிரயோஜனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்,
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் பிரயோஜனமுள்ள ஊழியக்காரனாக இருக்க எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment