ஜனவரி 18: ஆதியாகமம் 44-46; லூக்கா 18
Scripture வேதவசனம்: ஆதியாகமம் 45:4 அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான்.
அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப்
போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.
5. என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
6. தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
7. பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.

Observation கவனித்தல்: யோசேப்பு
மிகப்பெரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் சகோதரர்கள் தன்னை எவ்வாறு மோசமாக நடத்தினார்கள், அடிமையாக விற்றார்கள் என்பதைப் பற்றிய விவரங்களை எளிதில் மறக்க இயலும். ஏனெனில் யோசேப்பு இப்பொழுது தேவனின் நோக்கத்தை கண்டு அறிந்து கொண்டார்.
Application பயன்பாடு: மன்னிப்பது எனக்கு கடினமானதாக இருக்கும்போது, நான் மிகப்பெரிய காட்சியைக் காணாதபடியினாலேயே அவ்வாறு எனக்கு இருக்கிறது. என் மனம் சிறைபிடிக்கப்பட்டுவிடுகிறது. எனக்கு என்ன நடந்தது என்பதிலேயே என் கவனம் முழுவதும் இருக்கிறது. நான் எப்படி மோசமாக நடத்தப்பட்டேன் என்பதையே திரும்பத் திரும்ப சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் எவ்வளவு மோசமாக உணர்ந்தேன் என்பதையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை வேதனைப் படுத்தியவைகளுடன் தேவன் என்னை எவ்வாறு ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதையும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வைக்க விரும்புகிறார் என்பதையும் பற்றிய பெரிய காட்சியை நான் காணும்போது மட்டுமே, நான் யோசேப்பைப் போல மன்னிக்க முடியும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, மன்னிப்பதில் மிகவும் பெரியவரான நீர் என்னுள் வசிக்கிறீர் என்பதற்காக நான் உமக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். நீர் என்னை மன்னிப்பது போல நான் உடனடியாக மற்றவர்களை மன்னிக்கிறவனாக விளங்க நான் விரும்புகிறேன்.ஆமென்.
No comments:
Post a Comment