Scripture வேதவசனம்: சங்கீதம் 10:17 கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
Observation கவனித்தல்: தேவன் செவிகொடுக்கிறார் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு அற்புதமான ஒரு காரியமாக இருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த அல்லது உரத்த சத்தத்தை மட்டுமே தேவன் கேட்கிறார் என்று சொல்ல முடியாது. பலவீனமான மற்றும் தொய்ந்து போனவர்களின் இருதயக் கதறலையும் தேவன் கேட்கிறார். அவர் அதைக் கவனமாக கவனித்துக் கேட்கிறார். அவர்களின் கதறல் புறக்கணிக்கப்படுகிற ஒரு சத்தமாக அல்ல, அதன் பொருள் என்ன என்பதை அவர் புரிந்து கொள்கிறார்.
Application பயன்பாடு: தேவன் செவிகொடுக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது ஆகும். முதலாவதாக, நான் பிரச்சனையில் அல்லது கலக்கத்தில் இருக்கும்போது அவர் எனக்கு செவிகொடுக்கிறார். மற்றவர்களால் ஒருவேளை அதைக் கேட்பதற்கு நேரமில்லாமலோ அல்லது புரிந்துகொள்ள முடியாமலோ இருக்கலாம், ஆனால் தேவனுக்கு அதைப் புரிந்து கொள்ள நேரம் உண்டு.
இரண்டாவதாக, நான் கேட்கிற அதே கதறல்களைத்தான் அவரும் கேட்கிறார். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியாதபடிக்கு நான் அறிவில் குறைவுள்ளவனாக இருக்கிறேன். எப்படி அதை எடுத்துக் கொள்வது என்று கூட எனக்கு அனேக நேரங்களில் தெரிவதில்லை. ஆனால் தேவனுக்கு அப்படிப்பட்ட தடைகள் ஏதுமில்லை. அவர் பரிபூரணமாகப் புரிந்து கொள்கிறார். அவர் என்னையோ அல்லது வேறு எவரையாவது பயன்படுத்தக் கூடும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய கண்கள் சாதாரண குருவிகள் மீது கூட உள்ளன. நீர் என்னையும் கவனித்து எனக்கு செவிகொடுக்கிறீர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment