Wednesday, January 2, 2013

SOAP 4 Today - வேதனைப்படுகிற இருதயம்

 
Scripture வேதவசனம்:   ஆதியாகமம் 6:6  கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார்.  
 7 எனவே கர்த்தர், “பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும், மிருகங்களையும், ஊர்வனவற்றையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப் போகிறேன். ஏனென்றால் நான் இவற்றையெல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்றார்.
             8. ஆனால் கர்த்தருக்கு விருப்பமான வழியில் நடப்பவனாக நோவா            என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தான்.

Observation கவனித்தல்:   அனேகர் தேவனை அன்புள்ளவராக மட்டுமே காண விரும்புகின்றனர்.  சிலர் அவ் அவரை கோபப்படும் இறைவனாகக் காண்கின்றனர். ஆனால் நம்மில் அனேகர் அவரை வேதனைப்படுகிற (அ) வருத்தப்படுகிற தேவனாக பார்ப்பதில்லை. ஆனால் மேற்கண்ட வசனமானது அவர் வருத்தப்பட்டார் எனக் கூறுகிறது.                  
 
Application பயன்பாடு:  நம் நெருங்கிய நண்பர் வருத்தப்படும்போது, அவர்களை ஆறுதல்படுத்த அல்லது உற்சாகப்படுத்த  நாம் ஏதாகிலும் அதிகமாகச் செய்யக் கூடியவைகளைச் செய்ய முயற்சிப்போம். நாம் அவர்களுக்கு ஆறுதல் வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறோம், அவர்களை தொலைபேசியில் அழைத்து பேசுகிறோம், அல்லது இரவு விருந்துக்கு அவர்களை அழைக்கிறோம், அவர்களைச் சந்திக்கச் செல்கிறோம். செய்திகளில் நான் காண்கிற காரியங்கள் எனக்கு வருத்தத்தைத் தருகின்றன, அவை எவ்வளவு அதிகமாக தேவனுக்கு மனவருத்தத்தை அளிப்பவைகளாய் இருக்கும்! என் பரலோகப் பிதாவை மகிழ்ச்சியாக்க நான் இன்று செய்யக் கூடிய செயல் ஏதாகிலும் இருக்கலாம.
 
Prayer ஜெபம்:  பரலோகப்பிதாவே,  உம் வேதனையைக் குறைக்கவும்,  உம் இருதயத்திற்கு மகிழ்ச்சியையும் அளிக்கவும் நான் செய்யக் கூடிய செயல் என்ன என்று எனக்குக் காட்டும். ஆமென்.

No comments:

Post a Comment