Sunday, January 6, 2013

SOAP 4 Today - அவர் என்னுடன் உணவருந்துகிறார்

 
Scripture வேதவசனம்: ஆதியாகமம் 18:8  ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

Observation கவனித்தல்:  இது மிகவும் ஆச்சரியமான வேதபகுதி. சோதோம் கொமாராவிற்கு நியாயத்தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பு, அங்கிருந்த அக்கிரமத்தைப் பார்ப்பதற்காக யெகோவா தேவன் மனிதவடிவில் வந்தார். மரியாதைக் குலைச்சலைக் கொடுக்கக் கூடிய அந்த நகரத்திற்குப் போகும் வழியில், கர்த்தர் ஆபிரகாமின் கூடாரத்தில் தங்கினார். அவரை அவனுடைய கூடாரத்திற்குள் ஈர்த்தது ஆபிரகாமின் உணவு அல்ல என்பது உறுதி , அவன் கர்த்தருக்கு சினேகிதனாக இருந்ததினாலும், அவரை மதித்ததினாலும்  அவர் அங்கே சென்றார். அவர்செய்யப் போவதை ஆபிரகாமுடன் பகிர்ந்து கொண்டார். அந்த நகரத்திற்காக பரிந்து பேசும்படி ஆபிரகாமை அவர் அனுமதித்தார். அதேவேளையில் அங்கே இருந்த போது, ஆபிரகாம் அளித்த உணவையும் அவர் சாப்பிட்டார்.
 
Application பயன்பாடு:  தேவன் இன்று என் வீட்டிற்கு வந்தால், நான் ஒருவேளை ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் கொடுத்தாலும் என்னிடம் இருக்கும் எதையும் அவர் மகிழ்ச்சியாக சாப்பிடுவார் என்று நான் நம்புகிறேன். ”இது எனக்கு போதுமானது, இது எனக்குப் போதுமானது” என ஆண்டவர் சொல்லுவார் என நம்புகிறேன்.  “அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” என்று அவர் சொல்வார் என நம்புகிறேன்.  (வெளிப்படுத்தல் 3:20b)
 
Prayer ஜெபம்:   கர்த்தாவே, நீர் என்னுடன் உணவருந்தி, என் வீட்டில் தங்கி, என்னுடன் பயணம் செய்து என் வாழ்வில் பங்கெடுத்துக் கொள்கிறீர் என்பதை அறிந்து கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். என் வாழ்க்கை என் அன்பையும், உம்மை ஏற்றுக் கொண்டதையும் வெளிக்காட்டுவதாக. ஆமென்.

No comments:

Post a Comment