ஜனவரி 8: ஆதியாகமம் 20-22; லூக்கா 8
Scripture வேதவசனம்: ஆதியாகமம் 22:18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள
சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Observation கவனித்தல்: ஆபிரகாம் மிகக் கடினமான விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலுக்கான பரீட்சையில் தேறின பின்பு, தேவனால் மேற்கண்ட வாக்குத்தத்தம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. தேவன் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறதற்கு ஆதாரமாக பின்வருவனவற்றைக் கவனியுங்கள்: 1901 முதல் 2012 ம் ஆண்டு வரை நோபல் பரிசுபெற்ற தனிநபர்களில் 22% பேர் யூதர்கள், குறைந்தது 187 யூதர்கள் மற்றும் பாதி அல்லது 75 சதவீத அளவு நபர்கள் யூதப்பிண்ணனியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் அந்த காலகட்டத்தில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்களில் 36% பேர் யூதர்களே. உலக மக்கள் தொகையில் யூதர்கள் வெறும்.2% அளவே உள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையில் யூதர்கள் 2% அளவு உள்ளனர். (http://www.jinfo.org/Nobel_Prizes.html)
Application பயன்பாடு: நான் தேவனுக்குக் கீழ்ப்படிய உண்மை உள்ளவனாக இருக்கும்போது, ஆபிரகாமுக்குப் பண்ணின வாக்குத்தத்தத்தை நிறைவேற்றின தேவன், எனக்கும் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற உண்மை உள்ளவராக இருக்கிறார்.
Prayerஜெபம்: கர்த்தாவே, நீர் உண்மையுள்ளவர்! உம்மைச் சேவிக்கிறதற்கு செய்யும் எந்த முயற்சியும் தியாகமும் அதற்குத் தகுதியானதே. ஆமென்.
No comments:
Post a Comment