Sunday, February 10, 2013

தினந்தோறும்

Scripture வேதவசனம்:  அப்போஸ்தலர் 17:17 ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்

Observation கவனித்தல்: பவுல் அத்தேனே பட்டணத்தில் இருந்தார். அவர் ஓய்வு நாள் வரைக்கும் அல்லது ஞாயிற்றுகிழமை வரைக்கும் தன் கிறிஸ்தவக் கடமையைச் செய்வதற்காக காத்திருக்கவில்லை. மாறாக தினந்தோறும் அவர் மற்றவர்களுடனே பேசினார். பரிசுத்த வேதாகமத்தை நேசிக்கும் தேவனுடைய ஜனங்கள் தங்கள் விசுவாசத்தை அனுதினமும் வாழ்ந்து காட்டினர். அது அனுதின பொறுப்புகளுடன் இணைந்த அனுதின உறவாக இருந்தது.
 
Application பயன்பாடு: மற்ற விசுவாசிகளுடன் ஞாயிற்றுகிழமை இணைந்து கொள்வது மட்டுமே என் அனுதின வாழ்வு கிடையாது. ஆனால்,  ஞாயிற்றுகிழமைகளில் நான் மற்ற கிறிஸ்தவர்களுடன் இணைவது என் அனுதின கடமைகளில் ஒன்றாகவும், எனக்குள் அவர் காணப்பட நான் அனுமதிக்கிற தினமாக இருக்கிறது. வாராந்திர சபை கடமைகள் இயேசுவுடனான என் அனுதின வாழ்க்கையை கட்டி எழுப்புவதாக இருக்க வேண்டும். நான் மற்ற விசுவாசிகளுடனான உறவில் நான் வளருகிறேன்.  அனுதின நோக்கு மிகவும் முக்கியமானதாகும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  நீர் என்னுடன் அனுதினமும் பேசுகிறதற்கு மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறீர்.  நான் உமக்காக தினந்தோறும் உண்மையுள்ளவனாக வாழ எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment