Monday, February 11, 2013

கற்றுக்கொள்ளக் கூடியவன்

Scripture வேதவசனம்:  அப்போஸ்தலர் 18:24 அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.
25. அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
26. அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.
27. பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.
28. அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.

Observation கவனித்தல்:   அப்பொல்லோ வேதத்தைப் பற்றிய நல்ல அறிவும் நல்ல மனதும் உடையவராக இருந்தார். அவன் பொதுவில் பேச ஆரம்பித்த பொழுது, பிரிஸ்கில்லாலும் ஆக்கில்லாவும் அவருடைய போதனையில் ஏதோ இல்லை என்பதை அறிந்துகொண்டனர். அவர்கள் அப்பொல்லாவைக் கண்டபோது, அவர்கள் ஒரு முக்கியமான தன்மையைக் கண்டனர். அப்பொல்லோ கற்றுக் கொள்ளக் கூடையவராக இருந்தார். அப்பொல்லோ கற்றுக் கொள்ளக் கூடியவராக இருந்தபடியால்,  அவன் மிகவும் பயனுள்ளவராக மாறினார்.
 
Application பயன்பாடு: நான் வளரும்போது கற்றுக் கொள்ளக்கூடியவனாக தொடர்ந்து இருப்பது மிகவும் முக்கியமானதாகும். கற்றுக் கொள்வதற்கு இன்னும் ஏராளமானவை உண்டு. நான் கற்றுக் கொள்ள விருப்பமுள்ளவனாக இருந்தால், மற்றவர்களுக்கு நான் செய்யும் ஊழியம் வளர முடியும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நீர் மிகச் சிறந்த ஆசிரியர். தொடர்ந்து நீர் எனக்கு உம் வார்த்தையை கற்றுத்தாரும். அப்பொல்லாவின் வாழ்வில் ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாவை பயன்படுத்தியது போல மற்றவர்களை என் வாழ்வில் பயன்படுத்தும்.ஆமென்.

No comments:

Post a Comment