Monday, February 4, 2013

கவனமான கீழ்ப்படிதல்

பிப்ரவரி 5: யாத்திராகமம் 39-40; சங்கீதம் 15; அப்போஸ்தலர் 12
 
Scripture வேதவசனம்:  யாத்திராகமம் 40:34 அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.

Observation கவனித்தல்:   25முதல் 31 வரையிலான அதிகாரங்களில் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும் விதம் குறித்து தேவன் தகவல்களைக் கொடுத்தார் என்பதை வாசிக்கிறோம். 35முதல்39 வரையிலான அதிகாரங்களில்  ஆசரிப்புக் கூடாரம் கட்டப்படுகிறதைக் குறித்து நாம் வாசிக்கிறோம்.  39ம் அதிகார முடிவில் இருந்து 40ம் அதிகாரம் முழுவதிலும் “கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம்” என்ற வார்த்தையை 10 முறை காண்கிறோம்.  34ம் வசனத்தில் அவர்களின் கவனமான கீழ்ப்படிதலில் பலனை நாம் காண்கிறோம்:  கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.” 
 
Application பயன்பாடு:  தேவன் தம் மகிமைப் பிரசன்னத்தினால் கவனமான கீழ்ப்படிதலுக்கு பலனளிக்கிறார் என்பதை நான் காண்கிறேன்.  நான் அவருக்கு கவனமாக கீழ்ப்படிய விரும்புகிறேன். நான் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதல்ல, மாறாக எனக்கு மிகவும் சிறந்தது என்பதை அவர் அறிந்திருக்கிறார், என்னை அவர் நேசிக்கிறார் என்பதே அதன் பொருள்.  இது எனக்கு கீழ்ப்படியும் உணர்வைத் தருகிறது. இதற்கு எவ்வளவு ஆச்சரியமான பலன்!
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து நீர் எல்லா வேளைகளிலும் சொல்வதில்லை. நீர் சொல்லும்போது உமக்கு கவனமாகக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.ஆமென்.

No comments:

Post a Comment