Saturday, February 2, 2013

இரவு நேர ஆலோசனை

பிப்ரவரி 2: யாத்திராகமம் 33-34; சங்கீதம் 16;  அப்போஸ்தலர் 9
 
Scripture:   Psalm 16:7 எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.

Observation கவனித்தல்:  இரவு நேரங்களிலும் கூட நம் நினைவுகள் ஆண்டவரால் வழிநடத்தப்பட முடியும் என்பது எவ்வளவு ஆறுதலான சிந்தனை. நாம் ஓய்ந்திருக்கும் வேளைகளிலும் கூட கர்த்தரிடம் இருந்து வழிகாட்டலைப் பெற முடியும்.
 
Application பயன்பாடு:  நான் பகல் வேளையின் நடவடிக்கைகளை மதிப்பிடலாம். பரிசுத்த ஆவியானவர் நடத்துகிறபடி நான் கற்றுக் கொள்ள முடியும். வரப் போகிற நாளைக் குறித்து நான் சிந்தித்து, பரிசுத்த ஆவியானவர் அதற்கான தேவ வழிநடத்துதலை எனக்குத் தர முடியும்.  என்னுடைய நினைவுகளும், என் கனவுகளும் பரிசுத்தஆவியானவரால்  முறைப்படுத்தப்படலாம். 
  
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  நான் இளைப்பாறும் நேரத்திலும் கூட நீர் என் நினைவுகளை வழிநடத்துகிறீர் என்பதை அறிவதில் ஆசீர்வதிக்கப்படுகிறேன்.  என் ஒவ்வொரு நாளும் இரவும் உமக்குரியவைகளாக இருக்கட்டும். ஆமென்.

No comments:

Post a Comment