Scripture வேதவசனம்: யோசுவா 8:34 அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி
நியாயப்பிரமாணத்தில்சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும்
வாசித்தான்.
35. மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா, இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான்.
35. மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா, இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான்.
Observation கவனித்தல்: மோசே மரித்து, யோசுவா இஸ்ரவேலின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் உண்மையில், யோசுவா தலைவராக இருக்கவில்லை, தேவனே அங்கு தலைவராக இருந்தார். இங்கு மோசே செய்தது போல யோசுவா அனைவரையும் ஒன்றாகக் கூட்டி, வேத வசனங்களை வாசித்தான். இதற்கு ஒத்த தற்கால நடைமுறையாக, நம் நாட்டு தலைவர் எல்லோரையும் கூட்டி சேர்த்து நாட்டு சட்டதிட்டங்களையும் நம் உரிமைகளையும் சொல்வதைக் கூறலாம்.
Application பயன்பாடு:
நான் வேதாகமத்தை வாசிக்கும்போது, எனக்கு பிடித்த பகுதிகளை மட்டும் வாசித்து விட்டு மற்றவைகளை வாசியாமல் விட்டுவிடாதபடிக்கு நான் கவனமாக இருக்க வேண்டும். நான் தேவனுடைய வார்த்தைய வாசிக்கும்போது நான் அதை மதித்து, தேவனுடைய திட்டத்திற்கேற்றவாறு என் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறேன். நான் எனக்கு விருப்பமானது என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன், ஆனால் அவரோ எனக்கு தேவையானது என்ன என்பதைப் பார்க்கிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் வசனம் என் கால்களுக்குத் தீபமாகமும் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது (சங்கீதம்.119:115).
நான் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு அவற்றை என் இருதயத்தில் வைத்தேன் (சங்.119:11). ஆமென்.
No comments:
Post a Comment