Friday, March 22, 2013

வாக்குத்தத்தத்தைக் காப்பவர்கள்

Scripture வேதவசனம்: யோசுவா 9:18  சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.
19. அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக் கூடாது.
 
Observation கவனித்த;:  இஸ்ரவேலரின் பிரபுக்கள் மதியீனமாக கிபியோனியரிடம் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். கிபியோனியரின் ஏமாற்றுவேலை கண்டிபிடிக்கப்பட்ட போது,  தங்கள் வார்த்தையை முறித்துவிடவில்லை. தாங்கள் தந்திரமாக ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று இஸ்ரவேலர் சொல்லி இருக்கலாம். அவர்கள் வாழ்க்கை முறை கிபியோனியரின் தரத்தில் இல்லாமம் தேவனுடைய தரத்தில் இருந்தது.  ஆண்டுகள் கழிந்து சவுல் கிபியோனியரில் சிலரைக் கொன்றபோது, தேவன் இஸ்ரவேலர்களிடம் அது குறித்து விசாரித்தார். 
”மரணம் நம்மைப் பிரிக்கும் வரையிலும்” என்று ஆண்டவருடைய பிரசன்னத்தின் வாக்கு பண்ணுகிற ஒவ்வொருவருக்கும் இது ஒரு உறுதியான எச்சரிப்பாக இருக்கிறது. நிதி சார்ந்த உடன்படிக்கை செய்து கொள்கிறவர்களுக்கும் இது ஒரு எச்சரிப்பாக இருக்கிறது.  நாம் மதியீனமாகப் பேசின வார்த்தைகளுக்கும் கூட தேவன் நம்மிடம் கணக்கு கேட்கிறார்.
 
Application பயன்பாடு: எட் கோல் என்பவர் நம் வார்த்தைகளே நம் சொத்து பத்திரங்கள் என்றார் . நான் ஒரு வார்த்தையைச் சொல்லும்போது, என் வார்த்தையை நம்பி மக்கள் என்னைச் சார்ந்து இருக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீரே வாக்கைக் காப்பாற்றுவதில் பூரணராக இருக்கிறீர். நானும் உம்மைப் போல  மாற எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment