Sunday, March 31, 2013

பகிர்ந்து கொள்ளுதல்

Scripture வேதவசனம்:   2கொரிந்தியர் 1:3   நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
4. தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

Observation கவனித்தல்: தேவன் “இரக்கங்களின் பிதா” ஆகவும் “ஆறுதலின் தேவனாகவும் அறியப்பட்டார்.  இரக்கமும், ஆறுதலும் அவர் முன்னுரிமை கொடுப்பவைகளாக இருக்கிறபடியால், அவர் இவ்வாறு அழைக்கப்பட்டார். 

Application பயன்பாடு:  இரு பயன்பாடுகளை நான் இங்கு காண்கிறேன்: முதலாவதாக, எனக்கு ஆறுதல் தேவைப்படும்போது, எங்கே செல்ல வேண்டும் என்பதை நான் அறிகிறேன். என் பரம பிதா ஆறுதல் படுத்துவதில் சிறந்தவர். அவரே அதை கண்டுபிடித்தார். அவர் என்னை உண்டாக்கியவர்,   என்னை எப்படி ஆறுதல்படுத்துவது என்பதை அவர் அறிந்திருக்கிறார். இரண்டாவதாக,  ஆறுதல் தேவைப்படும் எவரையாவது நான் காணும்போது, தேவன் எனக்குத் தந்ததை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறேன். தேவனை அன்பு செய்கிறவர்கள் செய்யும் ஊழியத்தின் ஒரு பகுதியாக ஆறுதல்படுத்தும் பணி உள்ளது.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்கு தந்திருக்கிற ஆறுதலுக்காக நன்றி. இப்போது மற்றவர்களை ஆறுதல்படுத்த என்னை பயன்படுத்தும். ஆமென்.
 

No comments:

Post a Comment