Tuesday, March 5, 2013

என் விசுவாசத்தை உங்களால் கேட்க முடிகிறதா?

Scripture வேதவசனம்:   மாற்கு 11:22 இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
23. எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24. ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
25. நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

Observation கவனித்தல்: இந்த நான்கு வசனங்களில் இருந்து நான் வாசிப்பது என்னவெனில், நான் என் இருதயத்தில் விசுவாசிப்பவைகளுக்கும் என் வார்த்தைகளுக்கும் முரண்பாடு இல்லாமல் அவை ஒத்திருக்க வேண்டும். கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது.மேலும் விசுவாசத்தின் முதல் செயல் பொதுவாக பேசுவதாகவே இருக்கிறது.  என் வார்த்தைகளை ஆதரிக்கும் விசுவாசத்தின் மீதல்ல, என் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளே முக்கியம்.  இது மனம் சம்பந்தப்பட்டது ஆகும். வெறும் உதட்டளவில் ஆனது அல்ல.
 
Application பயன்பாடு: என் இருதயத்தில் நான் கொண்டிருக்கும் விசுவாசத்தின் வெளிப்பாடே என் வார்த்தைகள் ஆகும்.  நான் எந்தளவுக்கு அதிகமாக ஆண்டவரை அறிந்து அவருடன் என் மனம் பொருந்துகிறதோ அந்தளவுக்கு என் வார்த்தைகளில் விசுவாசம் வெளிப்படும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  என் உரையாடல்களில் நான் உம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எல்லோரும் காணக்கூடியதாக இருக்கட்டும். ஆமென்.

No comments:

Post a Comment