Scripture வேதவசனம்: உபாகமம் 4:37 அவர் உன் பிதாக்களில் அன்பு கூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு,
38. உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

Observation கவனித்தல்: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து தப்பிக்க வில்லை. மாறாக அவர்கள் தேவனுடைய வல்லமையினாலும் பிரசன்னத்தினாலும் அங்கிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் இருப்பதைக் காட்டிலும் உறுதியான, ஏராளமான மக்களைக் கொண்ட ஒரு இடத்தை அவர்களுக்குக் கொடுப்பதே தேவனுடைய சித்தமாக இருந்தது. அவர்கள் தங்கள் ஞானத்தையும் வல்லமையையும் சார்ந்து எகிப்தை விட்டு வெளியே வரவும், வாக்குத்தத்த தேசத்திற்குச் செல்வதற்கும் வாய்ப்பே இல்லாதிருந்தது. அவர்கள் அங்கே இருந்து வெளியேறினதற்கும், புதிய இடத்தைப் பெற்றதற்கும் மகிமையைப் பெறவேண்டியவர் தேவன் மட்டுமே.
Application பயன்பாடு:
எனக்கிருக்கும் ஞானம் அல்லது சக்தியைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிற வேலைகளை தேவன் எனக்குக் கொடுக்கிறார். நான் என்னைச் சார்ந்திருந்தால், தோல்வி அடைவேன். ஆனால் நான் அவரைச் சார்ந்திருக்கும்போது, அவர் வெற்றி பெறுகிறார். அவர் இவ்வாறு செய்யக் காரணமென்னவெனில், ஜனங்கள் என்னைப் புகழாமல் அவரைப் புகழும்படிக்கே.
Prayerஜெபம்: கர்த்தாவே, நான் உம்மைச் சார்ந்து, கவனமாக உம் வழிநடத்துலின் படி நடக்கும்போது, நான் வெற்றியின் மகிழ்ச்சியை அடைகிறேன். நீர் மகிமை அடைகிறீர். ஆமென்.
No comments:
Post a Comment