Thursday, March 7, 2013

அவர் சொன்னபடியே

Scripture வேதவசனம்: மாற்கு 14: 16. அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

Observation கவனித்தல்:  பஸ்காவை ஆசரிக்கும்படி ஆயத்தம் செய்வதற்காக சீடர்கள் இயேசுவால் அனுப்பப்பட்டனர்.  தண்ணீர் குடம் சுமந்து வருகிற ஒரு மனிதனைப் பார்க்கும்படி அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்தனர். இயேசு சொன்னது போலவே அவர்கள் அம்மனிதனைக் காணவும் செய்தனர்.
 
Application பயன்பாடு: இயேசு என்னிடம் சொன்னதற்குக் கீழ்ப்படிந்து விசுவாசத்தில் நான் செயல்படும்போது, நானும் கூட இயேசு சொன்னது போலவே காரியங்கள் இருப்பதைக் கண்டுகொள்கிறேன்.  அவருக்குக் கீழ்ப்படிவதே என் முன்னுரிமையாக இருக்கும்போது, சூழ்நிலைகளைப் பொறுப்பெடுத்துக் கொள்வது அவருடைய வேலை ஆக இருக்கிறது. என் கீழ்ப்படிதலே நான் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நிரூபணமாக இருக்கிறது.
 
Prayer ஜெபம்:   கர்த்தாவே, என் நம்பிக்கைக்கான நிரூபணம் என்பது என் வாயின் வார்த்தைகளில் மட்டும் அல்ல,  நீர் சொன்னதைக் கேட்டு கீழ்ப்படிந்து செயல்படுவதிலேயே இருக்கிறது.  ஆமென்.

No comments:

Post a Comment