Scripture வேதவசனம்: ரூத் 1:6 கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம்
அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட
மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
Observation கவனித்தல்: நகோமியின் கணவன் பஞ்ச காலத்தில் இஸ்ரவேலில் இருந்து மோவாபுக்கு சென்றிருந்தான். அவளின் மகன்கள் அங்கு திருமணம் செய்தனர். அவளுடைய கணவனும் மகன்களும் இறந்துவிட்டனர். இப்பொழுது அவள் தன் மருமக்களுடன் தனித்து இருக்கிறாள். ஆயினும் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி உதவியின்றியே மோவாபுக்கு நற்செய்தி வந்தடந்தது. இஸ்ரவேலில் பஞ்சம் ஓய்ந்தது. நகோமி திரும்பிச் செல்ல முடிவெடுத்தாள்.
Application பயன்பாடு: தேவன் எனக்காக நன்மையான ஒன்றை செய்யும்போது, அதை மற்றவர்கள் அறியச் செய்வது நல்லது. தேவன் மற்றவர்களுக்காக் செய்யும் நன்மையைப் பற்றி நான் கேள்விப்படும்போது, நான் அந்தச் செய்தியை மற்றவர்களுக்குப் பரப்ப வேண்டும். தேவன் இணையதளத்தையோ அல்லது ரேடியோவையோ நம்பி இல்லை. தேவன் தம் செய்தியைப் பரப்புவதற்கு மனிதர்களையே நம்பி இருக்கிறார். அவர் என்னைச் சார்ந்து இருக்கிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் நற்செய்தி தேவைப்படுகிற எவரையாகிலும் நான் இன்று சந்திக்க எனக்குதவும். ஆமென்.
No comments:
Post a Comment