Thursday, April 4, 2013

அவருடைய வழிநடத்துதலை பின்பற்றுதல்

Scripture வேதவசனம்:   2 கொரிந்தியர் 4:10  கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.

Observation கவனித்தல்: நம் சரீரத்தின் நோக்கம் இங்கே தரப்பட்டிருக்கிறது. அவை இயேசுவின் வாழ்க்கையை வெளிப்படுத்துவதற்காக இருக்கிறது.  நாம் நம் விருப்பங்களுக்கு மரிக்கும்போது, நாம் அவருடைய விருப்பங்களுக்கு உயிரோடிருக்கிறவர்களாக மாறுகிறோம். நம் சரீரமானது நமது வாழ்க்கையைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கையைக் காட்டுகிறதாக மாறிவிடுகிறது. நாம் மற்றவர்களின் கவனத்தைப் பெறுகிறது அனேக சமயங்களில் கடினமானதாக இருக்கிறது. அவர்களும் கடினமான அனுபவங்களை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கோபம் மற்றும் மனக்குழப்பத்திலேயே பதில் தருகிறார்கள்.  நாம் நம் வாழ்வில் ஏதோ வித்தியாசமானதொன்றை உடையவர்களாக இருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
Application பயன்பாடு: என்னைச் சுற்றி இருக்கிற சூழ்நிலைகளில் இயேசு எப்படி செயல்படுவாரோ அது போல நான் செயல்படும்போது இயேசுவின் வாழ்க்கை என்னில் காணப்படும், நான் என்னைச் சார்ந்து இருந்தால், நான் தவறிவிடுவேன்.  நான் அவருடைய வழிநடத்துலைப் பின்பற்றினால், அவர் நான் வெற்றிபெற எனக்கு உதவி செய்வார்,  என்ன நடக்கிறது என்பதல்ல, எனக்கு நடப்பவற்றில் நான் எப்படி அவரைப் பின்பற்றுகிறேன் என்பதே முக்கியமானது ஆகும்,
Prayer ஜெபம்: கர்த்தாவே,  நீர் எனக்குத் தேவை என்பதில் சந்தேகமேயில்லை, என்னிடம் பேசும்,  எப்படி செயல்படவேண்டும் என்பதை நீர் மட்டுமே அறிந்திருக்கிறீர். என்னை இன்று வழிநடத்தும், ஆமென்.

No comments:

Post a Comment