Scriptureவேதவசனம்: மத்தேயு 2:2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய
நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.
5. அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
5. அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
Observation கவனித்தல்: தேவன் வானசாஸ்திரிகளுடனே மூன்றுவிதங்களில் பேசினார்: முதலாவது வானத்தில் ஒரு அடையாளத்தின் மூலமாகவும், இரண்டாவதாக வேதத்தை ஆராய்ந்த வேதபாரகர்கள் மற்றும் ஏரோதின் மூலமாகவும் மற்றும் மூன்றாவதாக ஒரு கனவின் மூலமாக பேசினார். சாஸ்திரிகள் ஒவ்வொரு செய்தியையும் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் செயல்பட்டனர்.
Application பயன்பாடு: தேவன் என்னுடன் பலவழிகளில் பேசுகிறார். வேதாகமமே முதன்மையான வழி என்றாலும், தேவன் பேசுகிறதை நான் உணர்ந்து கொள்வது மிக முக்கியமானது ஆகும். நான் எவ்வளவு அதிகமாக வேதத்தை அறிந்திருக்கிறேனோ அந்தளவுக்கு அவர் மற்ற விதங்களில் பேசுவதையும் உணர்ந்து கொள்ளலாம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நான் வேதாகமத்தை தினமும் வாசிக்கவில்லை எனில், அவர் என்னுடன் பேச விரும்புகிறார் என்று நான் சொல்லிக் கொள்ளக் கூடாது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, செவிகொடுக்கிற என் இருதயத்திற்கு பேசும்படி நீர் உண்மையுள்ளவரகவே இருப்பதை நிரூபித்திருக்கிறீர். நீ உம் வார்த்தையின் மூலமாக என்னுடன் பேசுகிறீர். மற்ற வழிகளிலும் என்னுடன் நீர் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆமென்
No comments:
Post a Comment