Tuesday, April 9, 2013

நிச்சயமாகவே தகுதியானதுதான்

Scripture வேதவசனம்:   2 கொரிந்தியர் 9: 15. தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.

Observation கவனித்தல்: இந்த வசனத்தில் கொடுத்தலைப் பற்றிய தன் போதனையை பவுல் முடிக்கிறார். பவுலை உற்சாகப்படுத்தியது சொல்லி முடியாத ஈவு ஆக இருந்தது. தேவன் பவுலுக்குக் கொடுத்தவைகளைப் பற்றிய அவரின் உயர்வான மதிப்பீடுகள் அவரை சுவிசேஷத்திற்காக விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் தன் வாழ்க்கையைக் கொடுக்கப்பண்ணியது.
 
Application பயன்பாடு:  தேவன் எனக்குக் கொடுத்தவைகளைப் பற்றிய என் மதிப்பீடு என் கொடுத்தலின் நிலையை நிர்ணயிக்க உதவுகிறது. தேவன் எனக்குக் கொடுத்தவைகளை எவ்வளவு உயர்வாக நான் மதிப்பிடுகிறேனோ அந்தளவுக்கு அதிகமாக நான் கொடுக்க விருப்பமுடையவனாக இருக்கிறேன்.  தேவன் எனக்குக் கொடுத்தவைகளை எவ்வளவு அதிகமாக  மதிப்பிடுகிறேனோ அந்தளவுக்கு என் வாழ்வில் வரும் கடினமான தருணங்களை சகிக்க விருப்பமுள்ளவனாக இருக்கிறேன்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, உம்மை சேவிப்பது தகுதியானது ஆகும்.  அதற்காக எந்தப் பாடுகளையும் சகிப்பேன்.  உமக்காக நான் என் சிறந்ததை கொடுப்பதும், சிறந்ததாக நான் கருதுகிறதை விட்டுவிடுவதும் தகுதியானதுதான். ஆமென்.

No comments:

Post a Comment