Thursday, April 18, 2013

எப்பொழுதும்

Scripture வேதவசனம்: சங்கீதம்34:1  கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
2. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
3. என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
4. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

Observation கவனித்தல்:  தாவீது சூழ்நிலைகளைச் சார்ந்து தேவனை துதிக்கவில்லை. மாறாக தேவன் துதிக்குப் பாத்திரராக இருக்கிறார் என்று உணர்ந்திருந்தபடியால் துதித்தார். எல்லாம் நன்மையாக இருக்கும்போது மாத்திரமல்ல, எப்பொழுதுமே துதிக்கப்பட தேவன் பாத்திரராக இருக்கிறார்.  தாவீது ஒரு ஆசாரியர் அல்ல, அரசனாக மாறிய சாதாரணமான ஆடு மேய்க்கும் சிறுவனே என்பதைக் கவனியுங்கள். அவன் பேசக்கூடிய அனேக காரியங்கள் இருந்தன.  துதியானது அவருடைய உரையாடலில் எப்பொழுதும் இருக்கும்படி அவர் த்ரிந்து கொண்டார்.
 
Application பயன்பாடு:  தேவனைப் பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்பதைச் சார்ந்து துதி இருக்கக் கூடாது. தேவன் துதிக்குப் பாத்திரர் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன் என்பதை என் வார்த்தைகள் மூலம் மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  நான் யாராக இருந்தாலும், தேவன் எப்பொழுதுமே என் துதிக்குப் பாத்திரராயிருக்கிறார். தேவனுடைய நாமம் என் உதடுகளில் எப்பொழுதும் இருக்கும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நீர் துதிக்குப் பாத்திரர் என்பதை உணர்த்த எனக்கு நல்ல சூழ்நிலைகள் தேவையில்லை. நீர் எப்பொழுதுமே துதிக்குப் பாத்திரர். ஆமென்.

No comments:

Post a Comment