Friday, April 19, 2013

தேவனுடைய கரத்தில் நான்

Scripture வேதவசனம்:   1 சாமுவேல் 23:14  தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.

Observation கவனித்தல்: தாவீதைக் கொல்வதற்காக சவுல் அவனைத் தேடிக் கொண்டிருந்தான். சவுலின் கரத்தில் தாவீதை தேவன் ஒப்புக் கொடுக்கவில்லை என்பது, தாவீது தேவனின் கரங்களில் இருந்தான் என்பதைக் குறிக்கும் நல்லதொரு அடையாளமாகும். அதைவிட பாதுகாப்பான வேறொரு இடம் இல்லை.
 
Application பயன்பாடு: தேவனுடைய கரங்களில் இருப்பது என்பது அவருடைய சித்தத்தின் மையத்தில் இருப்பது ஆகும். அங்கேயே நான் அவருடைய சமூகத்துடன் ஐக்கியம் கொள்கிறேன். அங்கே அவருடைய வல்லமை என்னை பாதுகாக்கும் என்ற உறுதியையும், அவருடைய ஞானம் என்னை நடத்தும் என்ற உறுதியைப் பெற்றுக் கொள்கிறேன்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்க்கையை உம் கரங்களில் வைக்கிறேன்.  உம்முடைய சித்தத்தின் மையத்தில் இருப்பதைக் காட்டிலும் சிறப்பான இடம் எனக்கு இந்த உலகத்தில் இல்லை. ஆமென்.

No comments:

Post a Comment