Scripture வேதவசனம்: மத்தேயு (NIV) 10:7 போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.
8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.
Observation கவனித்தல்: இயேசு ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார், அத்துடன் ராஜ்யத்தின் வல்லமையை வெளிப்படுத்தும் குணமாக்குதலையும் செய்தார் (மத்தேயு.4:23;9:35). இப்பொழுது அவர் ஆரம்பித்ததை அவருடைய சீடர்கள் தொடர்ந்து செய்யும்படி அவர்களை அனுப்புகிறார். அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி (தேவனுடைய ஆளுகை மற்றும் அதிகாரம்) ஜனங்களிடம் சொல்லி, பிணியாளிகளைச் சுகமாக்குவதன் மூலமாக அதன் வல்லமையை ஜனங்களுக்கு காண்பிக்க வேண்டும். அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் சுகமாக்குதல் என்பது ராஜ்யத்தின் நற்செய்தியை பரப்புவதில் தொடர்ந்து முக்கியமானதாக இருந்து வருவதை நாம் காண்கிறோம்.
Application பயன்பாடு: என்னைச் சுற்றிலும் இருப்பவர்களிடம் ராஜ்ஜியத்தின் செய்தியைப் பேசுவது என் வேலை ஆகும். ஆனால் தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய வார்த்தைகள் பேசப்படுவதைக் காட்டிலும் செயலில் அதிகம் இருக்க வேண்டும். அது தேவனுடைய அதிகாரத்தின் கீழ் வாழ்கிற வாழ்க்கையில் காட்டப்பட வேண்டும். அது தேவனால் மட்டுமே செய்யமுடிகிற அற்புதங்களை உடையதாக இருக்க வேண்டும். பிரச்சனையின் நேரங்களில் தேவன் மட்டுமே தர முடிகிற சமாதானம் உண்டு. தேவன் இங்கே இருக்கிறார், அவர் இதைச் செய்தார் என்று சொல்லி, விளக்கக்கூடிய பதில்கள், ஞானம் மற்றும் அவருடைய ஆசீர்வாதங்கள் உண்டு.
Prayer ஜெபம்: கர்த்தாவே, இன்று உம் ராஜ்யத்தை அறிவிப்பதில் உம்முடன் இணைந்து கொள்ள விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவரே, உம் பிரசன்னத்தை வெளிப்படுத்தும் படிக்கு என் மூலம் கிரியை செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment