Friday, April 19, 2013

எல்லைக்குட்பட்ட சுதந்திரம்

Scripture வேதவசனம்:   1 சாமுவேல் 10:7  இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார்.
8. நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான்.

Observation கவனித்தல்:  தேவ ஆவி சவுலின் மீது பலமாய் இறங்கி அவன் வேறே மனுசனாக மாறுவான் என்று சாமுவேல் சவுலிடம் சொல்லி இருந்தார். சவுல் விரும்பினதை எல்லாம் செய்யும்படி சுதந்திரம் இருந்தது.  ஆனால் அந்த சுதந்திரம் எல்லைக்குட்பட்டதாயிருந்தது. சாமுவேல் சில ஆலோசனைகளைத் தரும்படி அவன் ஏழு நாட்கள் காத்துக் கொண்டிருந்தான்.
Application பயன்பாடு: கர்த்தருக்குள் எனக்கு இருக்கும் சுதந்திரத்தில் நான் களிகூர்கிறேன்.  சூழ்நிலைகளை நான் மதிப்பிடும் சுதந்திரத்தை உடையவனாக இருக்கிறேன், அவரை அதிகம் மகிமைப்படுத்துபவைகளைச் செய்கிறேன். ஆணால் என் சுதந்திரமானது எழுதப்பட்ட வார்த்தையின் எல்லைக்குட்பட்டது ஆகும்.  நான் பாவம் செய்து அவருடைய கற்பனைகளை மீற எனக்கு அனுமதி கிடையாது.  தேஅனுடைய வார்த்தையில் சொல்லப்படாதவைகள் இருக்குமாயின், நான் தவறாகச் செல்லும்பட்சத்தில் எனக்கு உணர்த்தை அவர் என்னுடன் கூட இருக்கிறார். நான் ஒரு சூழ்நிலைக் கைதி போல இருக்கிறேன். ஆனால் என் சூழ்நிலையானது ஒருபோதும் என் உள்ளான மனிதனை சிறைபிடிக்க முடியாது. நான் எப்பொழுதும் நன்றீ நிறைந்த இருதயமும், துதிக்கிற மனப்பான்மை உடையவனாக இருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் சுதந்திரமானது உம்மைப் பிரியப்படுத்துவதாகவும் கனப்படுத்துவதாகவும் இருக்க விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment