Scriptureவேதவசனம்:
2 கொரிந்தியர் 8:12 ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.
Observation கவனித்தல்: எருசலேமில் பஞ்சம் ஏற்ப்பட்டது. இந்த நிருபம் எழுதப்படுவதற்கு முன்பு, எருசலேமில் உள்ளவர்களுக்கு பணம் கொடுத்து உதவ கொரிந்தியரில் உள்ளவர்கள் ஒப்புக் கொண்டிருந்தார்கள். பவுல் சீக்கிரத்தில் கொரிந்து வழியாக போகப் போகிறார். அவர் அவர்கள் தங்கள் பரிசுகளைக் கொடுப்பதற்கு அவர்களை உற்சாகப்படுத்துவதுடன், கொரிந்து சபையில் சிலர் அவர்களின் பரிசுகளை எருசலேமிற்கு அவருடன் கொண்டுவரும்படியாகவும் கூறுகிறார்.
கொடுப்பவர்களுக்கான இரு நிபந்தனைகள் இவ்வசனத்தில் கொடுக்கப்படுகிறது. முதலாவது அவர்கள் விருப்பத்துடன் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட வில்லை. இரண்டாவதாக, கொடுக்கும்படி அவர்களிடம் பணம் இருக்க வேண்டும். கடனாளியாகி கொடுப்பதாக மாறிவிடக் கூடாது. அவர்கள் கடன் அட்டையில் இருந்து கொடுக்கும்படி கேட்கப்படவில்லை. அவர்களிடத்தில் இருப்பதில் இருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
Application பயன்பாடு: ஆண்டவர் எனக்குக் கொடுத்தவைகளுக்கு நன்றியுள்ளவனாக இருப்பதை எனது கொடுத்தல் காண்பிக்கிறது. (தசமபாகம் என்பது நான் பெற்றுக் கொண்டதில் 10% கொடுப்பது ஆகும், என்னிடம் இருப்பதில் 10% அல்ல) நான் அதிகம் கொடுக்கும்படி தியாகத்துடன் வாழ்வதைத் தெரிந்து கொள்ளலாம். கர்த்தர் எனக்கு எதிர்காலத்தில் தருவதில் இருந்து நான் கொடுக்கும்படி வாக்குப்பண்ணலாம். ஆனால் எனது கொடுத்தல் என்பது என்னிடம் இருப்பதில் இருந்தே இருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மிடம் கொண்டிருக்கும் அன்பை என் கொடுத்தலின் மூலமாக வெளிப்படுத்துகிறேன். நீர் உம்மிடத்தில் இருப்பவைகளில் இருந்து எனக்குக் கொடுப்பவைகளில் நான் மனவிருப்பத்துடனும் தாராளமாகவும் கொடுப்பேனாக. ஆமென்.
No comments:
Post a Comment