Scripture வேதவசனம்: நீதிமொழிகள் 13:1. ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.
Observation கவனித்தல்: இது போன்ற சிந்தனையுடன் கூடிய வசனங்கள் பலவற்றை நாம் நீதிமொழிகள் புத்தகத்தில் முழுவதும் காணலாம். கடிந்து கொள்ளுதல், ஆலோசனை அல்லது ஞானமுள்ள அறிவுரையை நிராகரிப்பது என்பது முட்டடள்தனமானது ஆகும். பெருமையானது ஒரு மனிதரை தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணச் செய்ய வைத்து விடுகிறது. மற்றவர்கள் சொல்வதற்குச் செவிகொடுக்காதவர்கள் தேவன் அவர்களுக்குச் சொல்வதில் பலவற்றை இழந்துவிடுவார்கள்.
Application பயன்பாடு: நான் பார்க்கமுடியாதவற்றையும், எனக்கு தெரியாதவற்றையும் என்னிடம் சொல்வதற்காகவே தேவன் அனேகரை என் வாழ்வில் வைத்திருக்கிறார். மற்றவர்கள் சொல்வதை நான் கேட்காவிடில், தேவன் சொல்வதில் அனேக காரியங்களை நான் தவற விட்டுவிடுவேன். பரிசுத்த ஆவியான்வர் மற்றவர்கள் மூலமாக என்னிடம் பேசி, அவர்கள் சொல்வதை நிதானிக்கவும் என் வாழ்க்கையில் பயன்படுத்தவும் உதவி செய்கிறார். இயேசுவின் சரீரத்தில் நான் ஒரு அவயவம் மாத்திரமே என்பதையும் மற்றவர்கள் உதவி எனக்குத் தேவை என்பதையும் இது முக்கியப்படுத்துகிறது.
Prayer ஜெபம்: ஆண்டவரே, நீர் என்னிடம் நேரடியாக பேசமுடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். மற்றவர்கள் மூலமாக என்னுடன் பேசுவதும் உம் திட்டம் ஆகும். என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் பேசுவதைக் கேட்ட எனக்குதவும்.அவர்கள் சொல்வதை சரியாக நிதானிக்கவும், பயன்படுத்தவும் எனக்கு உதவி செய்யும்.
No comments:
Post a Comment