Friday, May 3, 2013

நீங்கள் காதுகளால் கேட்டது என்ன?


Scripture வேதவசனம்: 2 சாமுவேல்ட் 7:22  ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை.

Observation கவனித்தல்: தாவீதுவின் வம்சத்தில் என்றென்றைக்கும் ஒரு இராஜாவை ஏற்ப்படுத்துவேன் என்று தேவன் சொன்னதற்குப் பதிலாக தாவீது பேசினார். தாவீது இப்படி சொல்வதை நான் கேட்கிறேன்,”உம்மைப் போல வேறெந்த தேவர்களைப் பற்றியும் பேசினதை நான் கேட்டதில்லை. மற்ற தேவர்களைப் பற்றி நான் கேள்விப்படுபவர்களில் எதுவும் உமக்கு அருகில் கூட வருவதில்லை.நீர் எல்லா தேவர்களுக்கும் மிகவும் பெரியவராக இருக்கிறீர்.
 
Application பயன்பாடு: தாவீது தன் நாட்களில் தேவனைப் பற்றிய ஆச்சரியத்தில் இருந்திருப்பாரெனில்,  இன்று நான் எவ்வளவு அதிகமாக அப்படி இருக்க வேண்டும். ஜனங்கள் இயற்கை தெய்வங்களையும், தங்கள் முன்னோரையும் வழிபடுகின்றனர். தங்கள் கடவுள் நித்தியமானவர், பரிசுத்தமானவர் மற்றும் அன்பானவர் என்று அவர்கள் எவரும் சொல்லி நான் கேட்டதில்லை.   பரிசுத்தமானவர் என்று நான் கேள்விப்பட்டவர் என் பாவங்களுக்காக பரிபூரண பலியை எதிர்பார்க்கிறவராகவும், நீதியுள்ளவராகவும் இருக்கிறார். தன் ஒரே மகனை என் பாவங்களுக்காக மரிக்கும்படி அனுப்பி அதன் மூலமாக நான் அவருடைய பிரசன்னத்தில் வரும்படியாக என்னை நேசிக்கும் ஒரு தேவனைப் போல வேறெவரைப் பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லை.
 
Prayer ஜெபம்: பரலோகப் பிதாவே, உம்முடைய வெளிப்படுத்தப்பட்ட பரிசுத்தம் மற்றும்  அன்பைப் பற்றிய ஆச்சரியத்தில் நான் இருக்கிறேன். நீர் ஆச்சரியமானவர். ஆமென்.

No comments:

Post a Comment