Sunday, May 5, 2013

அவர் பாத்திரராயிருக்கிறபடியால்

Scripture வேதவசனம்: மத்தேயு 22:37  இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
38. இது முதலாம் பிரதான கற்பனை.
39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

Observation கவனித்தல்:  முக்கியமான நிபந்தனையை நினைவுபடுத்துவது எப்பொழுதுமே நல்லது. எல்லாம் இந்த இரண்டு கற்பனைகளின் அடிப்படையிலேயே இருக்கிறது.
 
Application பயன்பாடு:  நான் என்னை நேசிப்பது போல என் அயலானை நேசிக்க வேண்டும். ஆனால் தேவனை என் முழு இருதயத்தோடும் (என் ஆவிக்குரிய வாழ்வின் மையம்), முழு ஆத்துமாவோடும் (என் விருப்பம் மற்றும் உணர்ச்சிகளின் மையம்) மற்றும் என் முழு மனதோடும் (என் அறிவு மற்று புரிதலின் மையம்) அன்பு கூற வேண்டும்.  
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  உமக்குத் தகுதியானபடி, தீவிரமாக மற்றும் முழுமையாக உம்மை அன்பு கூராமல் இருப்பதற்காக என்னை மன்னியும். ஆமென்.

No comments:

Post a Comment