Scripture வேதவசனம்: பிலிப்பியர் 2:13 ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
Observation கவனித்தல்: தேவன் அவருடைய நோக்கங்களை செய்து முடிப்பதற்காக எனக்குள் இருக்கிறார் என்பதை உணர்வது எவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்கிறது! அவர் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்.
Application பயன்பாடு: தேவனுடைய சித்தத்தைச் செய்வது மிகக் கடினமானது அல்ல என்பதை நான் கற்றுக்கொண்டு வருகிறேன். அது மிகவும் மகிழ்ச்சியானது ஆகும். இதில் நானும் அவரும் இணைந்திருக்கிறோம். அவர் என்னுடன் இருக்கலாம் என்பதல்ல, என்னுள் இருந்து செயல்படுகிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, இந்த உலகில் நான் தனியாக இல்லை என்பதை அறிவது எவ்வளவு நல்லது. ஞானம் மற்றும் வல்லமைக்காக நான் உம்மைச் சார்ந்திருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment