Thursday, June 13, 2013

நடைமுறை பேச்சு

Scripture வேதவசனம்:  பிலிப்பியர் 3:16   ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.
17. சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
Observation கவனித்தல்: கற்றுக்கொள்ள அனேகம் உண்டு. ஆனால் நாம் இப்போது நமக்கிருக்கும் அறிவின் படி நடக்கவேண்டியது அவசியம். நாம் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு மாதிரியாக பிலிப்பியில் இருந்த விசுவாசிகள் அப்போஸ்தலராகிய பவுலையும் அவருடன் கூட இருந்தவர்களையும்  பார்க்கும்படி உற்சாகப்படுத்தப் பட்டார்கள்.
 
Application பயன்பாடு:  என் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்படி வாழ விரும்புகிறேன். அது நடைபெறுவதற்கு,  நான் என் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். நான் எப்ப்படி வாழ்கிறேன் என்பது அதைக்காட்டிலும் முக்கியமானது ஆகும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, என்னுடன் பேசி நடந்துவரும்.  மற்றவர்கள் என்னைக் காணும்போது உம்மைக் காண்பார்களாக. ஆமென்.
 

No comments:

Post a Comment