Scripture வேதவசனம்: ஏசாயா 1: 17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை
ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும்
விசாரியுங்கள்.
18. வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
18. வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
Observation கவனித்தல்: இங்கே நம் அன்பின் ஆண்டவர் தம் பிரியமானவர்களுடன் தன் வேதனையைச் சொல்லி வழக்காடுகிறார். அவர்கள் நன்மையச் செய்வார்கள் ஆகில், தங்கள் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பார்கள். இல்லையேல், அவர்கள் பட்டயத்துக்கு இரையாவார்கள். இந்த வேத பகுதியில், தேவன் தம் வழக்கை மிகவும் நியாயமான முறையில் முன்வைக்கிறார். அவை எளிமையானதும், புரிந்து கொள்ள எளிதானதும் ஆகும். அவர்களின் கடந்த கால பாவத்தைப் பற்றி என்ன? அதை அவர் பார்த்துக் கொள்வார். அவைகளை அவர் பனியைப் போல வெண்மையானதாக்குவார்.
Application பயன்பாடு: தேவன் மனிதனை சிந்திக்கக் கூடியவனாகப் படைத்தார். என் மனதிலும், உணர்வுகளிலும் என்னுடன் இடைபடுகிறார். நான் எந்தளவுக்கு அதிகமாக வேதத்தை புரிந்து கொள்கிறேனோ, அவ்வளவதிகமாக அவரின் தேவை எனக்கு நியாயமானதாக இருக்கும். அவரின் விருப்பத்தை புறக்கணிப்பது அநியாயம் ஆகும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் என் குடும்பத்துடன் உறவாடுவதை விரும்புவது போல நீர் என்னுடன் உறவாட விரும்புகிறீர். உம்மைப் போல சிந்திக்க என் மனதிற்கு பயிற்சி தந்தருளும். ஆமென்.
No comments:
Post a Comment