Wednesday, July 10, 2013

தேவன் என்னுடன் இருக்கிறார்

Scripture வேதவசனம்: ஏசாயா 8:9   ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூர தேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,
10. ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
Observation கவனித்தல்: தேவனுடைய ஜனங்களுக்கு எதிரிகளாக இருந்தவர்களிடம் ஏசாயா தீர்க்கதரிசி பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் போர் செய்தாலும், சிதறடிக்கப்படுவார்கள். திட்டங்கள் தீட்டினாலும் அது அபத்தமாகும். அவர்கள் பெரிதாகப் பேசினாலும் அவை நிற்காது. ஏன்? தேவன் தம் ஜனங்களோடே இருக்கிறார். தேவனுடைய ஜனங்களின் எதிரிகள்தான் பயப்படவேண்டும்.
 
Application பயன்பாடு: நான் என் தேவனுடன் நடக்கும்போது, மனிதன் எனக்குச் செய்யப் போவதைக் குறித்து நான் பயப்படவேண்டியதில்லை. மற்றவர்கள் பேசுவதைக் குறித்து நான் பயப்படத் தேவையில்லை. நான் தேவனுக்கு மட்டுமே பயப்பட வேண்டும். நான் அவருடன் இருக்கையில், எதற்கும் பயப்படவேண்டியதில்லை.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர். நீர் என்னுடன் இருப்பதற்காக நன்றி. ஆமென்.
 

No comments:

Post a Comment