Scripture வேதவசனம்: எபிரேயர் 10:23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல்
உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர்
உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
Observation கவனித்தல்: நம் நம்பிக்கையை நாம் உறுதியாகப் பற்றிக் கொள்வதற்கான அடிப்படை அவருடைய குணாதிசயத்தில் காணப்படுகிறது. அவருடைய உண்மையே என் நம்பிக்கையில் ஆதாரம்.
Application பயன்பாடு: நான் அதிகமாக தேவனை அறிகையில், என் நம்பிக்கையும் அதிக உறுதியானதாக இருக்கிறது. நான் வேறு ஒருவரின் அறிவைச் சார்ந்து இருக்க வேண்டியதில்லை. நான் அவரை நேரடியாக அறிந்திருக்க வேண்டும். முதலாவதாக அவரை அறிந்து கொள்ள நான் அவருடைய வார்த்தையை வாசிக்க உண்மையாயிருக்கையிக், அதைப் புரிந்து கொள்வதற்கான சக்தியைத் தர அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார். இரண்டாவதாக, அவருடைய வார்த்தையை என் வாழ்க்கை சூழ்நிலைகளில் நான் பயன்படுத்துவதன் மூலமாக அவரை அறிந்து கொள்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் உண்மை உள்ளவர் என்பதை உணர்ந்து நான் வாழ எனக்கு இன்று உதவும். ஆமென்.
No comments:
Post a Comment