Scripture வேதவசனம்: யோவான் 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
17. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
18. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
17. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
18. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
Observation கவனித்தல்: இயேசு தம் சீடர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். எப்படி இயேசு இந்த உலகத்தில் இருந்து பெற்ற வாழ்க்கையை உடையவராக இல்லாமல் இருந்தாரோ அதுபோல, அவர்கள் பெற்றிருந்த ஜீவன் இருந்தது. அவர்களை உலகத்திற்கு அனுப்பினார். உலகத்தில் இருந்து வந்ததில் இருந்து அல்ல. அதுபோல, பரத்தில் இருந்து ஜீவனைப் பெற்ற பின் அவர்கள் உலகத்திற்கு அனுப்பப்பட்டார்கள்.
Application பயன்பாடு: நான் இயேசுவால் பரத்தில் இருந்து வந்த ஜீவனால் மறுபடியும் பிறந்தேன். நான் இப்போது உலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன். நான் உலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன் என்றாலும், நான் அதைச் சொந்தமாக நினைக்கக் கூடாது. பரலோகத்திற்கு நான் போகும் பயணத்தில் என்னுடன் மற்றவர்களும் சேரும்படி அழைப்பு விடுக்கவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என்னைச் சுற்றிலும் இருப்பவர்களிடத்தில் ஒரு தூதுவராக என்னை அனுப்பி இருக்கிறீர். நான் உம்மை சரியாக பிரதிபலிக்க உதவும். ஆமென்.
No comments:
Post a Comment