Scripture வேதவசனம்: சங்கீதம் 103:11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
12. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
12. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
Observation கவனித்தல்: நாம் வீட்டை வீட்டு வெளியே வருகிற ஒவ்வொரு வேளையிலும், தேவன் நம்மை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார் என்பதை நினைவுபடுத்தப்படுகிறோம். நாம் நம் வீட்டீன் கூரையில் இருந்து வானம் எனும் கூரையின் கீழ் நடக்க ஆரம்பிக்கிறோம். நாம் மற்றவர்களை எப்படி நேசிக்கிறோம் என்பதை நம் வீட்டு கூரை உயரத்தை வைத்து பார்க்கலாம். தேவன் நம்மை எப்படி நேசிக்கிறார் என்பதை வானத்தின் உயரத்தை வைத்து மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
Application பயன்பாடு: என் தேவன் என் மீது கொண்டிருக்கும் மாபெரும் அன்பு சோர்விலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் என்னை பாதுகாக்கிறது. எனக்கு உதவ அவர் பெரியவராக இருக்கிறார் என்பது மட்டுமல்ல, எனக்கு உதவுமளவுக்கு அவர் என்னை நேசிக்கவும் செய்கிறார். நான் எல்லாவற்றிற்காகவும் அவரை நம்ப முடியும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் அன்பின் அதிசயத்தை நான் எப்பொழுதும் கண்டுணரச் செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment