Scripture வேதவசனம்: லூக்கா15:31 அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.
32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.
32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.
Observation கவனித்தல்: பயன்படுத்தப்படாத வளத்தைப் பற்றி பேசுகிறார். அந்த மூத்த குமாரன் எப்பொழுதும் தகப்பனுடன் இருந்தான். ஆனால் அவன் அச்சந்தோசத்தை அனுபவிக்கவோ அதில் மகிழவோ இல்லை. அவன் சந்தோசமாக அல்ல, கடமைக்காகவே தந்தையிடம் வேலை பார்த்தான். அவன் தன் தகப்பனின் இருப்பைக் காட்டிலும் தம்பியின் இல்லாமையை அதிகம் யோசித்துக் கொண்டிருந்தான்.
Application பயன்பாடு:
அனேக சமயங்களில் நான் என்னுடன் இருக்கும் தேவ பிரசன்னத்தைக் காட்டிலும், என்னிடமில்லாத காரியங்களைக் குறித்து அதிகம் கவலைப் பட்டிருக்கிறேன். எனக்குள் இருப்பவர் என்னை எப்படிஎல்லாம் பாதுகாக்க முடியும் என்பதை விட என்னை எதிர்க்கும் எதிரி எனக்கு என்னச் செய்யக் கூடும் என்பதையே நான் யோசித்திருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் பிரசன்னத்தை, வல்லமையை, வாக்குத்தத்தங்களை மற்றும் நீர் எனக்காக வைத்திருக்கும் திட்டங்களை நான் எண்ணாமலிருந்ததற்காக மன்னியும்.
பிசாசு எனக்கு என்ன செய்வான் என்பதை யோசித்து என் நேரத்தை வீணாக்கியமைக்காக மன்னியும். என்னிடம் இருப்பதைக் கொண்டு சந்தோசமாக இராமல், இல்லாதைவைகளை நோக்கிக் கொண்டிருந்தமைக்காக என்னை மன்னியும். என் ஒவ்வொரு தேவைக்கும் உம் பிரசன்னமே போதுமானது. ஆமென்.
நாம் எழுத்தின்படி நாவல்களைப் போல அல்லது கதைகளைப் போல வசனங்களை தியானிக்கக் கூடாது. நாம் அவருக்குள்ளும் அவர் நமக்குள்ளும் இருப்பதை நாம் உணர்ந்து நம்மை அவர் தன் உள்ளங்கையில் வரைந்திருக்கிறார். பிசாசு நம்முடைய மனதைப் படிக்க முடியாது. ஆனால் தேவனாமல் நமது மனதை அறிய முடியும். மனுஷரைப் போல அவருக்கு சொருபம் இல்லை. அவர் அன்பின் சொரூபியாக இருப்பதால் நாம் அவருக்குள்ளும் அவர் நமக்குள்ளும் இருப்பதை உணர்ந்தால் நாம் மூத்த குமாரனைப் போல அங்கலைக்க மாட்டோம்.
ReplyDelete