Thursday, October 10, 2013

ஆச்சரியமான கேள்வி!

வேதவசனம்:லூக்கா 24: அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள். அப்பெண்கள் மிகவும் பயந்தார்கள். அந்த இரு மனிதரும் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருக்கிற ஒருவரை ஏன் இங்கு தேடுகிறீர்கள்? இது இறந்தோருக்குரிய இடம். இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார்.

கவனித்தல்: அவர்கள் மிகப் பெரிய கல்லால் அடைக்கப்பட்டிருக்கும் கல்லறையைக் காண வந்ததனர். அவர்கள் இயேசுவின் மரித்த சரீரத்தைக் காண வந்திருந்தனர். அவர்கள் பிரேதத்தின் மீது நறுமணம் பூசவேண்டுமென்றிருந்தனர். ஆனால் அவர்கள் கண்டதென்ன: கல் புரட்டப்பட்டிருந்தது. அங்கே யாருடைய சரீரமும் இல்லை... அந்தக் கேள்வியானது...- எவ்வளவு ஆச்சரியமான கேள்வி! உயிரோடிருக்கிறவரை மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன.

பயன்பாடு : இன்றும் இக்கேள்வி கேட்கப்படக் கூடும். நாம் நம் ஆவி மனிதனை திருப்திப்படுத்தத் தேடுகிறோம். நம்மை மகிழப்படுத்துகிற ஒன்றைத் தேடுகிறோம். நாம் நன்றாக இருப்பதாக நம்மை உணரச் செய்யும் ஒன்றை நாம் தேடுகிறோம். ஆவிக்குரியப் பிரகாரமாக  மரித்துக் கொண்டிருக்கிறவைகளின் மத்தியில் ஆவிக்குரியப் பிரகாரமாக உயிரோடிருக்கக் கூடியதை தேடுவதென்ன. நாம் மிகவும் பசியுடன் இருக்கும் ஒருவன் துணிக்கடைக்குள் செல்வதைப் போல காணப்படுகிறோம். நாம் நம்மை நன்றாக காட்டக்கூடிய உடைகளை அணிந்து கொண்டு, ஆனால் இன்னமும் நமக்கு பசி இருக்கிறதே என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் நம் மனதை பயிற்றுவிக்க பள்ளிக்கூடத்திற்கும், சரீரத்தைக் கட்டுக் கோப்பாக வைக்க உடற்பயிற்சியும் செய்கிறோம். ஆனால் நம் ஆவியை நாம் புறக்கணித்துவிடுகிறோம்.

ஜெபம்: கர்த்தாவே, நாங்கள் உம் மகிழ்ச்சிக்காகவே உண்டாக்கப்பட்டிருக்கிறோம். நீர் மாத்திரமே எங்களுக்குள் இருக்கிற பசியை, தாகத்தை தீர்க்க திருப்திப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment