Friday, October 11, 2013

சபையானது சபையாக இருக்கட்டும்

Scripture வேதவசனம்: நெகேமியா 8:2  எனவே, ஆசாரியனான எஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப்புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர்.

Observation கவனித்தல்:   அனைவரும் கூடுவதற்கு ஒரு கட்டிடம் தேவை என்பது அவர்கள் மனதில் தோன்றாமலிருந்திருக்கலாம். அவர்கள் கூடின அந்த இடம், வார நாட்களில் சந்தையாகவோ அல்லது பொதுமேடை ஆகவோ இருந்திருக்கலாம். இது போலவே அப்ப்போஸ்தல கால ஆதிச் சபையும் சபை கட்டிடம் குறித்து கவலைப் பட்டதாக தெரியவில்லை.  ஆதிச் சபை வீடுகளிலும் தேவாலய வளாகத்திலும் ரோமிலுள்ள நினைவுஸ்தலங்களிலும் கூடினர். சபை என்பது கட்டிடம் அல்ல, அது அதின் மக்களே. சபை என்பது ஒரு கட்டிடத்தில் முகவரியில் அல்ல, அவருடைய நாமத்தில் இருவர் மூவர் கூடிவரும் போதெல்லாம் அது சபையே.
 
Application பயன்பாடு: ஞாயிறு கூடுகைகளில் நாம் கூடிவரும் நேரம் சபையின் ஒரு பகுதி நேரமே. நான் எங்கெல்லாம் விசுவாசிகளுடன் கூடி வருகிறேனோ அது சபையாக இருக்கிறது. சபையின் மிக முக்கியமான அம்சம் அவருடைய பிரசன்னமே ஆகும். இருவர் மூவர் அவருடைய நாமத்தில் கூடி வரும் வேளைகளில் எல்லாம் அவர் அங்கிருப்பதாக வாக்களித்திருக்கிறார் (மத்தேயு.18:20)
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, என்னை உம் சபையில் ஒரு உறுப்பினராக்கியதற்காக நன்றி.  நாங்கள் சபையாக கூடி வரும்போது, இருவர் மூவரென்றாலும் நீர் உம் பிரசன்னத்தை அருளுவதற்காக நன்றி. ஆமென்.

No comments:

Post a Comment