Tuesday, October 29, 2013

நான் அவசியம் நினைவில் கொள்ளவேண்டும்

Scripture வேதவசனம்: மாற்கு  4:35  அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
36. அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.
37. அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
38. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.
39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.

Observation கவனித்தல்: அந்த சுழல்காற்றில், அவர்கள் புறப்படுவதற்கு முன்ப்ய் இயேசு சொன்னதை சீடர்கள் மறந்துவிட்டது போல காணப்படுகிறது.   ”அக்கரைக்குப் போவோம் வாருங்கள்.” போவோம் என்ற வார்த்தை அவரும் அவர்களுடன் வருகிறார் என்பதை அவர்களுக்கு  அறியச் செய்திருக்க வேண்டும்.  போவோம் என்ற வார்த்தையானது அவர்கள் அக்கரையில் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யப் போவதைக் குறிப்பதாக நான் கருதுகிறேன். அவர்கள் அக்கரைக்குச் சென்று கொண்டிருந்தனர்.  
 
Application பயன்பாடு: நான் சூழ்நிலைகளை அனுமதித்தால், அவை இயேசு எனக்குச் சொன்னவைகளை மறக்கப்பண்ணக் கூடும். அவர் சொன்னதை நான் நினைவில் கொள்ள வேண்டும்.
 
Prayer ஜெபம்:  பரிசுத்த ஆவியானவரே, இயேசு எனக்குச் சொன்னவைகளை தொடர்ந்து எனக்கு நினைவுபடுத்தும். ஆமென்.

No comments:

Post a Comment