Scripture வேதவசனம்: மாற்கு 6:35 வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகு நேரமுமாயிற்று;
36. புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
37. அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.

Observation கவனித்தல்: சீடர்கள் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொன்னார்கள். இயேசுவோ நீங்களே அவர்களுக்குச் சாப்பிட ஏதாகிலும் கொடுங்கள் என்று சொன்னார். சீடர்கள் பணப்பிரச்சனையைப் பார்த்தனர். இயேசு கிடைக்கக் கூடிய தன்மையைப் பார்த்தார். அவர்கள் சோதித்த பின்பு ஐந்து அப்பங்களும் இரு மீன்களும் இருப்பதைக் கண்டனர். அந்த அப்பங்களும் மீன்களும் இயேசுவின் கைகளில் கொடுக்கப்பட்டன. அவர் ஸ்தோத்திரம் பண்ணி அதை பிட்டு அவர்கள் கைகளில் கொடுத்தார். இயேசு முன்பு அவர்களுக்குச் சொன்னதை சீடர்கள் செய்தனர். அவர்கள் ஐயாயிரம் பேருக்கு உண்ண உணவு கொடுத்தனர்.அவர்கள் அனைவரும் திருப்தியாக சாப்பிட்டு மீதியான துணிக்கைகளை கூடைகளில் எடுத்தனர்.
Application பயன்பாடு: நான் எதாகிலும் செய்யும்படி இயேசு என்னிடம் ஒன்றைக் கொடுத்தால், என்னிடம் என்ன இருக்கிறது என்பதையும் அதை எப்படி பெருகப்பண்ணவேண்டும் என்பதையும் அவர் அறிவார். நான் என்னிடத்தில் இருப்பவைகளை பெருகப்பண்ணுகிற அவருடைய கரங்களில் வைக்கவேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் என்னுடையவைகளை உம் கரங்களில் வைக்கும்போது, என்னிடம் இருந்தவைகளைக் காட்டிலும் மீதி அனேகம் இருக்கச் செய்கிறீர். நீர் ஆச்சர்ரியமானவர். ஆமென்.
No comments:
Post a Comment