Scripture வேதவசனம்: மத்தேயு 27:42 மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை;
இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும்,
அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
Observation கவனித்தல்: இயேசு சிலுவையில் இருந்து இறங்கி இருந்தால் அவ்ர்கள் அவரை விசுவாசித்திருக்கக் கூடும் - அல்லது அவர்கள் அப்படிச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு எந்தவிதமான நன்மையையும் அளித்திருக்காது. இயேசு சிலுவையில் இருந்து இறங்கி இருந்திருந்தால், பாவ மன்னிப்பு உண்டாகி இருக்காது. அவர் சிலுவையில் தொங்கியதால் நமக்கு பாவ மன்னிப்பு உண்டாயிற்று. பாவத்தின் சம்பளம் மரணம், வேதனை அல்ல. ஆனால் இயேசு வேதனைப்படுவதைக் காட்டிலும் அதிகமாக சகிக்க வேண்டியிருந்தது. அவர் மரிக்குமளவும் சிலுவையில் தொங்கினார். நாம் இப்பொழுது அவரை நம்ப முடியும்.
Application பயன்பாடு: என் பாவங்களைப் போக்க இயேசு குறுக்கு வழியை ஏதும் பயன்படுத்தவில்லை. அவர் அவைகளை தம்முடையதாக ஏற்றுக் கொண்டு, பாடுபட்டு, இரத்தம் சிந்தி எனக்காக மரித்தார். இயேசுவின் பரிகாரத்தின் மூலமாக என் பாவங்களுக்கான கிரயம் அதிகமாகவே செலுத்தித் தீர்க்கப்பட்டது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, இப்படிப்பட்ட அன்பு தொடர்ச்சி ஆன நன்றிக்கு உரியதாக இருக்கிறது. ஆண்ட்ரெ கிரவுச் என்பவர் பாடுவது போல, நான் எப்படி நன்றி சொல்வேன்...என் நன்றியை ஆயிரம் தேவதூதர்கள் சேர்ந்து பாடும் சத்தமும் கூட வெளிப்படுத்தமுடியாது. ஆண்டவரே உம் அன்பு ஆராதனைக்குரியது. உம் சித்தத்தைச் செய்வதற்காக நான் அனைத்தையும் தத்தம் செய்ய தகுதியானதாக இருக்கிறது. எனது விருப்பத்திற்கு இல்லை என்றும் உம்மைப் பிரியப்படுத்துபவைகளுக்கு ஆம் என்றும் சொல்ல அது தகுதியானதே. ஆமென்.
No comments:
Post a Comment