Scripture வேதவசனம்: 1தெசலோனிக்கேயர் 1: 4. எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
Observation கவனித்தல்: இந்த வசனத்தின் கருத்தை இருவிதங்களில் பார்க்க முடியும். தனது செய்தியை கேட்டு ஏற்றுக் கொண்டவர்களுக்காக தேவனிடம் பவுல் தன் நன்றியை வெளிப்படுத்துகிறார். இவர்கள் அவருடைய கடினமான ஊழியத்தை பலனுள்ளதாக்கினவர்கள். தேவனுக்கு நன்றி கூறும் இந்த வார்த்தையில், பவுல் தன் வாசகர்களை உற்சாகப்படுத்தவிரும்புகிறார் எனலாம். அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள நன்மையை அவர் காண்கிறார் என்பதை அவர்களுக்கு அறியச் செய்கிறார். அவர்கள் பவுலால் நேசிக்கப்பட்டும், மிக உயர்வாக கருதப்பட்டும் இருந்தார்கள். பவுல் தேவனுடன் பேசுகையில் அவர்களைப் பற்றியே பொதுவாகப் பேசினார்.
Application பயன்பாடு: இப்பொழுது இந்த வசனத்தை வாசகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பாருங்கள். எனக்குள் இருப்பதை வேறு ஒருவர் பார்த்து, அதை அவர் ஜெபத்தில் கூறுவதற்கு ஏற்றதாக கருதுகிறார் என்பது என் இருதயத்தை மகிழ்ச்சியாக்குகிறது. என் வாழ்க்கைக்காக மற்றவர்கள் தேவனுக்கு நன்றி செலுத்துமளவுக்கு நான் வாழ விரும்புகிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் என் வாழ்க்கையில் வைத்திருக்கிற மனிதர்களுக்காக நன்றி. ஒவ்வொருவருமே விசேசமானவர்கள். ஆமென்.
No comments:
Post a Comment