Monday, December 2, 2013

மேற்கொள்ளுதல்

Scripture வேதவசனம்: ரோமர் 12:21  நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

Observation கவனித்தல்: தீமைக்கு தீமை செய்தல் பதிலுக்குப் பதிலாக இருக்கலாம். ஆனால் அது தீமையை மேற்கொள்ள முடியாது. நன்மை செய்வது மட்டுமே அதைச் செய்யும். இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் நாம், நன்மை செய்து மேற்கொள்கிறவர்களாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். தீமையானது தோற்கடிக்கப்பட்டு, நிற்பதற்குக் கூட இடம் இல்லாமல் நம்மை விட்டு துரத்தப்பட்டது. தேவனுக்கே மகிமை.
 
Application பயன்பாடு: பதிலுக்குப் பதில் என நான் செய்யாமல், நான் அதை வெற்றிபெற வேண்டும் என தேவன் விரும்புகிறார்.  நன்மை செய்யாமல் நான் வெற்றிபெற முடியாது. வேதனைப்படுத்துகிற ஒரு கருத்தை பாராட்டு எனும் ஆயுதத்தால் மேற்கொள்வதாகும். நான் வெறுப்பைப் பெறும்போது மன்னிப்பதை இது குறிக்கிறது.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் வெற்றி பெறவேண்டும் என்று நீர் விரும்புகையில், நான் பதிலுக்குப் பதில் செய்யாதபடிக்கும் எனக்கு உதவும்.

No comments:

Post a Comment