Tuesday, December 3, 2013

நல்ல ஒரு கேள்வி

Scripture வேதவசனம்: எபேசியர் 4:30  அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
31. சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
32. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

Observation கவனித்தல்: இவ்வேதபகுதியில் பரிசுத்த ஆவியானவரின் ஆளுமைத்தன்மையை நாம் பார்க்கிறோம். அவர் ஏமாற்றத்தின் வேதனையை உணர்கிறார்.  பரிசுத்த ஆவியானவர் இருவிதங்களில் துக்கப்படலாம். முதலாவதாக, அவர் தடை செய்த காரியங்களைச் செய்யும்போது விசனப்படுகிறார். இரண்டாவதாக, அவர் செய்ய விரும்புகிறவைகளை நாம் செய்யாதபோது துக்கமடைகிறார். 

Application பயன்பாடு:  பரிசுத்த ஆவியானவர் விரும்புகிறதைச் செய்யாமல் நான் அவரை பலமுறை துக்கமடையப் பண்ணியிருக்கிறேன்.  ஏதோ சில சாக்குப் போக்குகளை அதற்குச் சொல்லிக் கொள்கிறேன். பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து வரும் விருப்பத்தை உணராமல் இருந்திருக்கிறேன்.  அதை நிராகரித்து ஒதுக்கித் தள்ளியிருக்கிறேன். இங்கே ஒரு கேள்வி எனக்குள் எழுகிறது, “தேவனுடைய சித்தத்தை நான் செய்யாமல் போனேனாகில், நான் அவரை இழந்துவிடுவேனா?” இதற்கான பதில் ஆம் என்று இருக்குமானால், நான் அவருக்கு கீழ்ப்படிய என்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.
 
Prayer பரிசுத்த ஆவியானவர்:  பரிசுத்த ஆவியானவரே, நான் உம்மை துக்கப்படுத்த விரும்பவில்லை. நான் உம்மைப் பிரியப்படித்த விரும்புகிறேன். நீர் செய்ய விரும்புகிறதை  எப்போதும் செய்வதே சிறந்தது. ஆமென்.

No comments:

Post a Comment