Scripture வேதவசனம்: சங்கீதம் 119:17 என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.
Observation கவனித்தல்:
சங்கீதக்காரனுக்கு தேவனுடைய உதவி தேவைப்படுகிறது என்பதை விட, எதற்காக அவர் தேவனுடைய உதவியைத் தேடுகிறார் என்பது என் கவனத்தை ஈர்க்கிறது. வாழ்க்கை என்பது எளிதானதாகவோ அல்லது அவருக்குப் பிரியமானதாகவோ இருக்கவில்லை. அவர் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படியாக தேவனுடைய உதவி அவருக்கு தேவைப்பட்டது. தேவனை எப்படி பிரியப்படுத்துவதௌ என்பதை வெளிப்படுத்துவதாக அவருடைய வாழ்க்கை இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமாக வரும் பலன்களை மக்கள் காணவேண்டும் என அவர் விரும்பினார்.
Application பயன்பாடு: என் ஜெபங்களில் இருந்து தேவன் என்ன பெற்றுக் கொள்வார்? எனது வேண்டுதலுக்குப் பதிலளிப்பதன் மூலமாக, நான் என் சுய இஷ்ட, அர்ப்பணமில்லாத வாழ்க்கைக்கு அவர் உதவி செய்கிறாரா? அதினால் அவருக்கோ அல்லது எனக்கோ பயன் இல்லை. அவர் எனக்கு உதவும் போது, அவருடைய சித்தத்தை அர்ப்பணத்துடன் செய்யக் கூடிய ஒரு சிறந்த ஊழியக்காரனைப் பெறுகிறாரா?
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் உதவிக்கு தாமதம் செய்யாமல் நன்றி செலுத்துவோனாக இருக்க விரும்புகிறேன். நீர் எனக்குச் செய்ததை மற்றவர்களுக்குச் சொல்ல ஆயத்தத்துடன் எப்பொழுதும் இருக்க உதவும். உம் வார்த்தைக்கு உடனடி கீழ்ப்படிதலுடன் வாழ உதவும். நீர் என் ஜெபங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் நான் வாழ விரும்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment