Monday, March 3, 2014

அவருடைய வார்த்தைகளின் முக்கியத்துவம்

Scripture வேதவசனம்: மாற்கு 10:32 அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:
33. இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
34. அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
35. அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, 
 37.... உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றார்கள்

Observation கவனித்தல்: இயேசு அனேக முறை தான் மரித்து மூன்று நாட்களுக்குப் பின் மரித்தோரிலிருந்து உயிரோடெழுவதைக் குறித்து சீடர்களிடம் குறிப்பிட்டுச் சொன்னார். ஆனால் வேளை வந்த போதோ அவர்கள் அவர் சொன்னதை மறந்து விட்டனர். அவர் அவர்களுக்குச் சொல்ல விரும்பியதைக் கவனிப்பதைக் காட்டிலும், அவர்கள் அவரிடம் சொல்ல விரும்பியதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக நான் நினைக்கிறேன்.
 
Application பயன்பாடு: அநேக முறை தேவன் என்னிடம் சொல்ல விரும்புகிறவைகளை விட நான் தேவனிடம் சொல்ல விரும்புகிறவைகளிலேயே அதிக ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன். பின்பு அவர் சொன்னதை நினைவுகொள்வதில் தடுமாறுகிறேன். நான் அவர் சொல்வதைக் கேட்க முன்னுரிமை கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே,   உம் குரலைக் கேட்கவும், உம் வார்த்தைகளை கவனமாக கேட்கவும், நீர் சொல்வதற்கு அதிக மதிப்பு கொடுக்கவும்,  பிரச்சனையான நேரங்களில் நீர் சொன்னதை நினைவு கூறவும் எனக்கு உதவும். ஆமென்.

No comments:

Post a Comment