Friday, February 28, 2014

நான் என்ன நினைக்கிறேன்

Scripture வேதவசனம்:    மாற்கு 8:27 பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
28. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
29. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.

Observation கவனித்தல்: நான் ஒரு நாளைக் கடந்து செல்லும்போது, மற்றவர்கள் இயேசுவைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது போதுமானதல்ல. நான் என்ன நினைக்கிறேன் என்பதே மிக முக்கியமானது.
 
Application பயன்பாடு: ஒரு நாளுக்கான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான என் விசுவாசம் இயேசுவைப் பற்றிய எனது சிந்தனைகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அவர் என்னுடன் இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கவேண்டும். என் சவால்களை மேற்கொள்ள அவர் போதுமானவர் என்று நான் விசுவாசிக்க வேண்டும். அவர் எனக்கு உதவ விரும்புகிறார் என்றும் நான் விசுவாசிக்க வேண்டும். 

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மை எவ்வளவு அதிகமாக அறிந்து கொள்கிறேனோ அவ்வளவதிகமாக நீர் எனக்கு போதுமானவர் என்றும் எனக்குதவ விரும்புகிறீர் என்றும் விசுவாசிக்கிறேன். என் கண்களை உம் மீது பதிக்க உதவும். ஆமென்.

No comments:

Post a Comment